Search
Wednesday 13 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வருத்தம் தெரிவித்த கோத்தா

வருத்தம் தெரிவித்த கோத்தா

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் தான் மிகவும் வருந்துவதாகவும், இச்சம்பவம் உண்மையாக இருப்பின் அது தொடர்பில் உரிய பிரிவினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தான் நம்புவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் கணக்கில் அவர் இதனை பதிவு செய்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கினிகத்தேன பொல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு 7.30 அளவில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திசாநாயக்க பயணித்த வாகனத்தை வழிமறித்த சிலர் மீது பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர்களால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.
இதன்போது காயமடைந்த இருவரில் ஒருவர் கரவனெல்லை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், மற்ற நபர் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *