Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வறட்சியால் நீர்விநியோகத்திற்கு பாதிப்பு : கொழும்பில் 24 மணி நேர நீர்வெட்டு

வறட்சியால் நீர்விநியோகத்திற்கு பாதிப்பு : கொழும்பில் 24 மணி நேர நீர்வெட்டு

நாட்டில் நிலவும் வறட்சியான கால நிலையால் நீர் விநியோகத்திற்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வளங்கல் மற்றும் நீர் விநியோக சபை தகவல்க் தெரிவிக்கின்றன.
பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையினால் தொடர்ச்சியாக நீரை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறபபடுகின்றது. அத்துடன் மின் வெட்டு காரணமாகவும் தொடர்ச்சியாக நீரை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் பல பிரதேசங்களில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை கொழும்பில் சில பிரதேசங்களில் இன்று காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு , தெஹிவளை , மமஹரகம , பொரலஸ்கம , கொலன்னாவ ஆகிய நகர சபை பிரதேசங்களில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *