Search
Monday 22 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்

வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பம்

யாழ். வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பங்குபற்றலுடன் நேற்று ஆரம்பமானது.இந்த 62 ஏக்கர் காணிகளை நான்கு வலயங்களாக பிரித்து, அவற்றினை அளந்து அப்பிரதேச மக்களுக்கு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் நேற்றும் இன்றும் மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமையும் இடம்பெறவுள்ளதுடன் , இப்பிரதேசத்திற்குள் தமது காணி உள்ளவர்கள் தெல்லிப்பளை பிரதேச செயலாளரை தொடர்பு கொள்வதனூடாக தமது காணிகளை அடையாளப்படுத்தி அளவீடுகளை மேற்கொள்ள முடியும் என ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.5977-1

வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.அத்துடன் தமது காணிகளை அடையாளப்படுத்தி அளவீடுகளை மேற்கொள்ள முடியும் என ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *