தலைப்பு செய்திகள்

வல்­வெட்­டித்­துறையில் இந்திர விழா ஏற்பாடுகள் பூர்த்தி

வல்­வெட்­டித்­துறையில் இந்திர விழா ஏற்பாடுகள் பூர்த்தி

50 வரு­டங்­க­ளுக்­கும் மேலாக வல்­வெட்­டித்­துறையில் இந்­திர விழா கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நிலை­யில் வல்­வெட்­டித்­துறை முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவின் இறுதி நாளான நாளை இந்­திர விழாவை முன்­னிட்டு, வல்­வெட்­டித்­துறை ஊரிக்­காடு தொடக்­கம் பொலி­கண்டி வரைக்­கு­மான சுமார் நான்கு கிலோ­ மீற்­றர் தூ­ரத்­துக்கு 15 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட மின்­கு­மிழ் அலங்­கா­ரங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.அதற்­கான ஏற்­பா­டு­கள் பெரும் எடுப்­பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு நிறை­வு­பெற்­றுள்­ளன. இந்த விழாவை யாழ்ப்­பா­ணத்­தி­லும் ஏனைய பகு­தி­க­ளி­லும் இருந்­தும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் நேரில் சென்று பார்­வை­யிட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.FB_IMG_1555510352427

சுமார் 300க்கும் மேற்­பட்ட வாழை­கள் இந்த விழா­வுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்­துக் கட­வு­ள்­க­ளின் திரு­வு­ரு­வங்­கள் பொருத்­தப்­பட்ட 10 கட்­அ­வுட்­கள் பெரி­ய­ள­வில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. சுமார் 100 புகைக்­கூண்­டு­கள் விடப்­ப­ட­வுள்­ளன. அவற்­றில் ஐந்து கூடு­கள் அறு­பது அடி­கள் உய­ர­மு­டிவை. வாண­வே­டிக்­கை­க­ளுக்­கும் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. ஏழு இசைக்­கு­ழுக்­கள் இசை வழங்­கத் தயா­ரா­கி­யுள்­ளன. வில்லுப்­பாட்டு, நாட­கம், நட­னம், பாரம்­ப­ரிய நிகழ்­வு­கள் என்­ப­வற்­று­டன் கட­லில் மேடை அமைத்­தும் ஓர் இசை நிகழ்வு நடத்­தப்­ப­ட­வுள்­ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *