Search
Wednesday 13 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்ட கிராம சேவையாளர் உள்பட இருவருக்கு விளக்கமறியல்

வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்ட கிராம சேவையாளர் உள்பட இருவருக்கு விளக்கமறியல்

தொண்டமனாறு அரசடிப் பகுதியில் உள்ள வல்வெட்டித்துறை மக்கள் வங்கியின் முகாமையாளரின் வீடு நேற்று அதிகாலை 2 மணி தொடக்கம் வவுனியா மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.வவுனியாவில் மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயணித்த ஜீப் வாகனம் முகாமையாளரின் வீட்டின் முன் தரித்து நிற்பதாகத் தெரிவித்தே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் அத்திமீறிச் பொலிஸார் செயற்பட்டமை தொடர்பில் முரண்பட்ட கிராம சேவையாளர் உள்பட இருவரை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.வங்கி முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவரே பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *