Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வல்வெட்டித்துறையில் பதற்றம் சிவாஜிலிங்கம் கைதாகி விடுதலை

வல்வெட்டித்துறையில் பதற்றம் சிவாஜிலிங்கம் கைதாகி விடுதலை

யாழ். வல்வெட்டித்துறையில் கைதுசெய்யப்பட்ட வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை தவிசாளர் கர்ணானந்தராசா ஆகியோர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சகல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உட்பட 7 பேர் வல்வெட்டித்துறையில் இன்று காலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தீருவில் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குறித்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை சட்டவிரோத நடவடிக்கையென குறிப்பிடும் பொலிஸார், குறித்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் வல்வெட்டித்துறை ஆலடியில் அமைந்துள்ள, தலைவர் பிரபாகரனின் வீட்டின் முன்பாக, துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த 4 பேரின் அடையாள அட்டைகளை பறித்துச் சென்ற போலிசார், அவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இன்று வல்வெட்டித்துறையில் பொலிசார் ஆயுதங்களுடன் சோதனை நடவடிக்கைகளி்ல் ஈடுபட்டுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.(15)vvt-police-261118-seithy (1) vvt-police-261118-seithy (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *