Search
Monday 16 September 2019
  • :
  • :

வல்வெட்டித்துறை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று

வல்வெட்டித்துறை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று

கடந்த 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்த விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை நடத்தியது.ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் நடத்தினர்.72 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடுயின்றி 100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.13882312_155572854873682_4021262686146229333_n

வல்வை நூலகம் தீயிடப்பட்டிருந்தது. பல ஆயிரக்கணக்கான நூல்கள், தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி,நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்பட்டு இருந்தன. 176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.எங்கும் சடலங்கள், அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள், காயமடைந்த, கொல்லப்பட்ட உறவினர்களின் அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் ரண வடுவாக அச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர்.download

வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES யின் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES யின் 17.08.89 இதழில் இந்த செய்தி வெளிவந்தது.67553722_2174695792640622_1725553126062161920_n-300x222

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.13934596_155572874873680_5065849071357984479_n

அன்று இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்குச் சென்று பார்த்தவர்களால், அங்கு நடைபெற்று முடிந்த கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.வல்வை படுகொலைகள் நடந்து வருடங்கள் பல ஓடிவிட்டன. இன்றும் அந்த பயங்கர நாட்களின் பல நிகழ்வுகள் இப்பொழுதும் அந்த மக்களின் மனங்களில் நிலைத்து நிக்கின்றன.இன்று வல்வைப் படுகொலையின் 30 வது ஆண்டு நிகழ்வு வல்வெட்டித்துறையில் நினைவு கூரப்படுகின்றது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *