Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வழமைப் போன்று பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு ஆராய்வு

வழமைப் போன்று பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு ஆராய்வு

பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் ஆராயப்பட்டு வருகின்றது.
கடந்த திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் மீள திறக்கப்பட்ட போதும் இருநூறுக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் கிழமை அடிப்படையில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களை அழைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தது.
ஆனபோதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் நிலையை கருத்திற்கொண்டு அந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், சுகாதார வழிமுறைகளுக்கு ஏற்ப கல்வி நடவடிக்கைகளை தொடர முடியுமாயின் வழமை போன்று மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதில் எவ்வித தடையும் இல்லை என கல்வி அமைச்சு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *