Search
Monday 19 August 2019
  • :
  • :

வவுனியாவில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவருக்கு எதிராக அவதூறு: இணையத்தளம் ஒன்றுக்கு எதிராக முறைப்பாடு

வவுனியாவில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவருக்கு எதிராக அவதூறு: இணையத்தளம் ஒன்றுக்கு எதிராக முறைப்பாடு

ரெலோ அமைப்பின் வவுனியா மாவட்ட இணை அமைப்பாளர் தன்மீது அவதூறை ஏற்படுத்தியதாக இணையத்தளம் ஒன்றுக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ரெலோ அமைப்பின் வவுனியா மாவட்ட இணை அமைப்பாளர் ஒருவருக்கு எதிராகவே அவதூறை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. அண்மையில் பாடசாலை அதிபர் ஒருவருக்கு எதிராக வெளிவந்த செய்தி ஒன்றினையடுத்து சில முகப்புத்தகங்களில் குறித்த ரெலோ அமைப்பின் தலைவரையும், அந்த அதிபருடன் இணைத்து செய்திகள் வெளியாகி இருந்தன. அதற்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் ரெலோ அமைப்பின் மாவட்ட இணைஅமைப்பாளரால் முறைப்பாடு செய்யப்பட்டு அந்த முகப்புத்தகம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று அந்த தகவல்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது சில நாட்கள் கழிந்த நிலையில் வெளிநாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் இணையம் ஒன்று ரெலோ அமைப்பின் மாவட்ட இணை அமைப்பாளருக்கு எதிராக ஆதாரபூர்வமற்ற வகையில் அவருக்கும், அவரது கட்சிக்கும் சேறு பூசும் வகையில் செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை செய்து தனிப்பட்ட நபர்களை இலக்கு வைத்து ஆதாரமற்ற செய்தியை வெளியிட்ட குறித்த இணையம் மீது நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா பொலிசில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *