Search
Monday 25 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்

வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்

வவுனியாவில் இன்று காலை 8.30 மணியளவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் வடமாகாணகல்வி பண்பாட்டலுவலக்கள் திணைகக்களத்தினால் வவுனியா மாவட்ட செலயகத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சோமசுந்தரப்புலவரின் நினைவுரையினை தமிழ் மணி அகளங்கள் நிகழ்த்தியதுடன் வவுனியா விபுலானந்தக்கல்லூரி மாணவர்கள் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை பாடசாலைப்பாடியதுடன் சோமசுந்தரப்புலவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியதுடன் ஆடிப்பிறப்பை முன்னிட்டு ஆடிக்கூழ், கொளுக்கட்டை என்பனவும் பரிமாறப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதான அனுசரணையினை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். ரவீந்திரன், நகரவரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவருமான எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், ஆர். கதிர்காமராஜர் ஆகியோரால் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோஹன புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் த. திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ. பிரதீபன், முன்னாள் நகர உப பிதா சந்திரகுலசிங்கம், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC_0291

DSC_0266 (1) DSC_0259

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *