Search
Sunday 9 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு: துப்பாக்கி முனையில் மக்கள் (வீடியோ)

வவுனியாவில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு: துப்பாக்கி முனையில் மக்கள் (வீடியோ)

வவுனியாவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார கூட்டம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இக் கூட்டத்திற்கு மதியத்தில் இருந்தே மைதானம் அமைந்துள்ள பகுதியை சூழ பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வருகை தந்தபோது விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு படையினர் புடைசூழ மண்டபத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன் பின்னர் அவர் உரையாற்ற முற்பட்டபோது மண்டபத்தினை சூழ விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கியிருந்த நிலையில், மக்கள் துப்பாக்கி முனையில் அமர்ந்திருந்தனர். இதன்போது அவர் உரையாற்றியிருந்தார்.

DSC_0014 (2)

IMG_0089

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *