Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் கேரளா கஞ்சா வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான மதவாச்சி நோக்கி பேருந்தில் பயணித்த இராணுவ வீரரின் கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிராம் 200மில்லிகிராம் கேரளா கஞ்சாவினை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் யாழ்ப்பாணம் வரணி இராணுவ நிலையத்தில் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *