Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் தொடரும் நுண்நிதி நிறுவனங்களின் அடாவடி

வவுனியாவில் தொடரும் நுண்நிதி நிறுவனங்களின் அடாவடி

நேற்று மாலை 5.50மணியளவில் சாந்தசோலைக் கிராமத்திற்குச் சென்ற நுண் நிதி நிறுவனப்பணியாளர்கள் இருவர் அப்பகுதியில் கடன் பெற்றுக்கொண்டவரின் வீட்டிற்குச் சென்று நிறுவனத்தினால் வழங்கப்பட்ட இறுதி நினைவூட்டல் கடிதம் ஒன்றினை வழங்கியதுடன் பணத்தை தண்டப்பணத்துடன் செலுத்துமாறும் கோரியுள்ளனர்.

இதன்போது இவ்வாறு மாலை 5.50மணியளவில் வீடுகளுக்குச் சென்று கடன் பணம் அறவிடுவது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டபோது அவ்வாறான ஆவணங்கள் ஏதும் உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் காண்பிக்குமாறு கோரி தகாதவார்த்தைகளினால் குடும்ப பெண்ணிடம் அடாவடித்தனத்தில் ஈடுபாடுள்ளனர்.

இந்நிலையில் நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்கும் வீடுகளுக்குச் சென்று பணம் அறிவிடுவதையும் தமது கிராமத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடன் பெற்றுக் கொண்ட சிலரினால் செலுத்தப்படாமலிருந்த நிலுவைப்பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த சில தினங்களாக அப்பகுதிகளுக்குச் சென்ற நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் அவதானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அப்பகுதிப் பெண்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

சாந்தசோலை பெண்களின் இக்குற்றச்சாட்டுக் குறித்து நுண்நிதி நிறுவனத்தின் முகாமையாளர் கருத்து தெரிவித்தபோது நேற்று மாலை சாந்தசோலைக்கிராமத்திற்கு பணம் அறவிடுவதற்காக எமது நிறுவனத்தின் பணியாளர்கள் செல்லவில்லை இறுதி நினைவூட்டல் கடிதத்தினை வழங்குவதற்காக அங்குள்ள வீடுகளுக்குச் சென்றதாகவும், பிரதேச செயலகத்தினால் நிறுவனங்களுக்கு மாலை 5மணியின் பின்னர் வீடுகளுக்குச் சென்று பணம் அறவிடவேண்டாம் என்று கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், தமது நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக முகாமையாளர் என்ற ரீதியில் தமது நிறுவனத்தில் கடன் பணம் பெற்றுக்கொண்டவர்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.எப்படியாயினும் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் மாலை நேரங்களில் வீடுகளுக்குச் சென்று பணம் அறவிடுவது பிரதேச செயலகத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *