தலைப்பு செய்திகள்

வவுனியாவில் படையினரின் கெடுபிடியால் மக்கள் பெரும் சிரமத்தில்

வவுனியாவில் படையினரின் கெடுபிடியால் மக்கள் பெரும் சிரமத்தில்

நாட்டில் தற்கொலைத் தாக்குதல் நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆகின்ற நிலையிலும் வவுனியா நகரில் படையினரின் சோதனை நடவடிக்கைகள் குறைவடையவில்லை.வவுனியா வைத்தியசாலையிலுள்ள படையினர் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நோயாளர்களைப் பார்வையிடச் செல்லும் உறவினர்கள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தலைக்கவசத்தையும் வெளியே வைத்துவிட்டு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.வைத்தியசாலை, நகர பள்ளிவாசலுக்கு முன்பாக வீதியிலுள்ள படையினரால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் கடந்த ஈஸ்டர் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையிலிருந்து மக்கள் மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில் வவுனியாவின் பல பகுதிகளிலுள்ள படையினரின் சோதனை நடவடிக்கை காரணமாக வர்த்தகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *