Search
Sunday 26 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் பிக்குகளின் உருவப்படம் தீயிட்டு எரிப்பு

வவுனியாவில் பிக்குகளின் உருவப்படம் தீயிட்டு எரிப்பு

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிதுறையை அவமதித்த தேர்ர்களை கைது செய்ய கோரியும், இந்து ஆலயங்களின் புனித தன்மையை பாதுகாக்குமாறு தெரிவித்தும் வவுனியா மாவட்ட சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் ஆர்பாட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது..ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது ஜனநாயாக ஆட்சியா, பௌத்த பேரினவாத பிக்கு ஆட்சியா, காவி உடையில் காடையர்களா, மதப்பிரச்சினையை தூண்டாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.இதன் போது பௌத்த பிக்குகளின் உருவப்படம் அடங்கிய பதாதைகளும் தீயிட்டு எரிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி, சிவமோகன்,சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் மகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், உள்ளூராட்சி சபை தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளை சார்ந்தோர், பொது அமைப்பினர், பொதுமக்கள்,என பலர் கலந்துகொண்டனர்.வவுனியா சுயாதீன இளைஞர்களால் குறித்த கன்டன ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.(15)1 2 3 4 5 6 7 8


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *