Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்க மறுத்த ஐ.நா பிரதிநிதி

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்க மறுத்த ஐ.நா பிரதிநிதி

மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் அவர்கள் தலைமையிலான குழு வவுனியாவில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்திக்க மறுத்துள்ளதாக தெரியவருகிறது.

மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் அவர்கள் யூலை 10 தொடக்கம் 14ஆம் திகதிவரை இலங்கையில் விஷேட சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் நீதிபதிகளை வவுனியா மேல் நீதிமன்ற கேட்போர் கூடத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

IMG_6774[1]அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் வீதியின் மறுபுறத்தில் தமது வாகனத்தை நிறுத்தி சுமார் 15 நிமிடங்கள் வரை அவ்விடத்தில் நின்றனர்.

இதன்போது அவரினை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன உறவுகள் சந்திக்க முயன்ற போது, அவரினை சந்திக்க தற்போது முடியாது எனவும், நேரம் இல்லை என ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதியின் மொழிபெயர்ப்பாளர் தெரிவித்தார். இதனையடுத்து ஐ.நா பிரதிநிதிகள் உடனடியாக அவ்விடத்தில் இருந்து சென்று விட்டனர். இதனால் காணமல் போனவர்களின் உறவினர்கள் பெரும் விரக்தியுடன் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

IMG_6779[1]

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *