Search
Friday 21 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் மதியம் வரை 50 வீத வாக்குப் பதிவு

வவுனியாவில் மதியம் வரை 50 வீத வாக்குப் பதிவு

வவுனியாவின் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்கு பதிவு மதியம் வரை 50 சதவீதமாக பதிவாகியுள்ளது என மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்றது. பெரியளவிலான அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லை. வாக்களிப்பு முடிந்ததும் 56 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு 8 மணிக்கு முழுமையான முடிவுகள் வெளியிடப்படும். ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் மதியம் வரை 50 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *