Search
Tuesday 26 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் வீதியில் விளையாடி இரு சிறுவர்களை கடித்து குதறிய நாய்

வவுனியாவில் வீதியில் விளையாடி இரு சிறுவர்களை கடித்து குதறிய நாய்

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் வீதியில் விளையாடிய இரு சிறுவர்களுக்கு நாய் உருட்டி உருட்டி கடிதத்தில் காயமடைந்த இரு சிறுவர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, உக்கிளாங்குளம், நாவலர் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 மற்றும் 5 வயது சிறுவர்கள் இருவரை வீதியில் நின்ற அயல் வீட்டு நாய் உருட்டி உருட்டி கடித்ததில் இரு சிறுவர்களும் காயமடைந்தனர். அவ் வீதியால் சென்றவர்கள் இரு சிறுவர்களையும் நாய் கடித்து குதறுவதை அவதானித்து நாயை விரட்ட முற்பட்ட போது நாய் அவர்களையும் கடிக்க முற்பட்டது.

இந்நிலையில் அவ் வீதியில் குழுமிய மக்கள் நாயை விரட்டியடித்துடன் காயமடைந்த இரு சிறுவர்களையும் மீட்டு வவுனியா வைத்தியாசலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *