Search
Wednesday 17 January 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் வெடிக்காத நிலையில் கைக் குண்டுகள் மீட்பு

வவுனியாவில் வெடிக்காத நிலையில் கைக் குண்டுகள் மீட்பு

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் வயல் காணியிலிருந்து வெடிக்காத நிலையில் மூன்று 3 கைக் குண்டுகளை மீட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று மீட்கப்பட்ட இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியிலுள்ள வயல் காணியை துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது காலை 11.45 மணியளவில் அப்பகுதியில் வெடிக்காத நிலையிலிருந்த 3 கைக் குண்டுகளை அக் காணியை துப்பரவு செய்தவர்கள் அவதானித்துள்ளனர்.

இதையடுத்து பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியை பார்வையிட்டபோது மேலும் அப்பகுதியில் மோட்டார் குண்டுகள் இருக்கக் கூடும் எனத் தெரிவித்த பொலிசார் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அப்பகுதியை மேலும் அகழ்வு பணியை மேற்கொள்ளவிருப்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

image-0-02-06-797ed161af9a798b601b1b4dc479ca53595a6696c5f7402f9e4f19b7c7779721-V image-0-02-06-2f7ec9f165c2942865578f3b9a4fffff8a4960b5985d5d978bb10f7ee77c6631-V

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *