தலைப்பு செய்திகள்

வவுனியாவில் வெட்டுக் காயத்துடன் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியாவில் வெட்டுக் காயத்துடன் இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெட்டுக் காயத்துடன் இளைஞன் ஒருவரின் சடலம் வவுனியா பொலிசாரால் நேற்று மாலை (11.01) மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வீதியில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்த வந்த பாலரஞ்சன் பாலநிஷாந்தன் 25வயதுடைய குடும்பஸ்தரே தலையில் வெட்டுக் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தரின் தாய், தந்தையினர் சுவிஸ் நாட்டில் வசித்து வருவதாகவும் திருமணமாகி மனைவி நைனாதீவில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதேவேளை, அயல் வீட்டுக் காரருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இவர் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

image-0-02-06-c344b6f5af492698c88a179e6034251fa4d454d87b2795deac275d9c1fb6d7ff-V

20170111_181816_resized 20170111_181841_resized_2

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *