Search
Friday 27 April 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக்கூட்டணி வசம்

வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக்கூட்டணி வசம்

வவுனியா நகரசபையினை தமிழர் விடுதலைக்கூட்டணி தன்வசப்படுத்தியுள்ளதுடன் தலைவராக இ. கௌதமன் தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா நகரசபையின் தலைவர், உப தலைவர் தெரிவு இன்று வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தலைவருக்கான போட்டியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் நா.சேனாதிராஜாவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமனும் நிறுத்தப்பட்டு பகிரங்க வாக்களிப்பு இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட 75 வயதான நா. சேனாதிராஜாவுக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட 37 வயதான இ.கௌதமன் தமிழர் விடுதலைக்கூட்டணியின் 3 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 3 வாக்குகளும், ஐக்கிய தேசியக்கட்சியின் 3 வாக்குகளும், ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும், பொது ஜனபெரமுனவின் ஒருவாக்குமாக 11 வாக்குகள் பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

உபதலைவருக்கான தெரிவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் க. சந்திரகுலசிங்கமும் சுதந்திரக்கட்சியின் சார்பில் சு. குமாரசாமியும் போட்டியிட்டிருந்தனர்.

இவர்களில் க. சந்திரகுலசிங்கத்திற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட சு. குமாரசாமிக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் 3 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 3 வாக்குகளும், ஐக்கிய தேசியக்கட்சியின் 3 வாக்குகளும் ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும் பொது ஜனபெரமுனவின் ஒரு வாக்குமாக 11 வாக்குகள் பெற்று உபதலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இந் நிலையில் அனைத்து தெரிவுகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடு நிலைவகித்திருந்தது.

இதேவேளை, வவுனியா நகரசபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட இ.கௌதமன் முன்னாள் நகரசபை தலைவரான வேலுச் சேமன் எனப்படும் ச.சுப்பிரமணியத்தின் பெறாமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத் தெரிவுக்கு பார்வையாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம’.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஜ.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

DSC_0012 DSC_0002 DSC_0008 DSC_0009 DSC_0010

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *