Search
Wednesday 13 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியா நகரசபை தவிசாளருக்கு எதிராக நடைபாதை வியாபாரிகள் ஆர்பாட்டம்

வவுனியா நகரசபை தவிசாளருக்கு எதிராக நடைபாதை வியாபாரிகள் ஆர்பாட்டம்

வவுனியா நகரசபைத் தவிசாளர் இ.கௌதமன் அவர்களுக்கு எதிராக நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இன்று மதியம் 1 மணியளவில் வவுனியா, இலுப்பையடி சந்தியில் ஆரம்பித்த ஆர்பாட்டக்காரரின் ஊர்வலமானது ஹொரவப்பொத்தனை வீதியூடாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து நகரசபை முன்றலுக்கு சென்றது.

வவுனியா நகரசபை வாயிலை மறித்த நடைபாதை வியாபாரிகள் நகரசபைத் தலைவருக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரசபைத் தவிசாளர் நடைபாதை வியாபாரிகளை தகாத வார்த்தையால் பேசியமைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், நடைபாதை வியாபாரத்திற்கு அனுமதி வழங்கு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை இதன்போது எழுப்பியிருந்தனர்.

சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில், அங்கு வந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா ஆகியோர் சமரசம் செய்ய முயன்ற போதும் அது பலனளிக்கவில்லை. நகரசபைத் தவிசாளரை ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருமாறு நடைபாதை வியாபாரிகள் கோரியிருந்தனர். இருப்பினும் இவர்களது சமரச முயற்சியால் நகரசபை தவிசாளரை ஆர்ப்பாட்டப்காரர்களில் ஐவர் சென்று சந்திப்பதற்கு இணக்கம் காணப்பட்டு சந்திப்பு நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு தீபாவளி பண்டிகை வரை நடைபாதை வியாபாரத்திற்கு அனுமதி வழங்குவதாகவும், அதன்பின் சபையின் அனுமதி பெற்று குறித்த இடத்தில் மட்டும் வியாபாரம் செய்ய இடம் ஒதுக்கப்படும் எனவும் தவிசாளர் தெரிவித்ததுடன், நடைபாதையில் வியாபாரம் செய்ய சபை அனுமதிக்காது எனவும் தெரிவித்திருந்தார். இதனை ஆர்ப்பாட்டக்காரர்களும் ஏற்றுப் கொண்டமையையடுத்து ஆர்பாட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா, இலுப்பையடிப்பகுதியில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை நகரசபைத் தவிசாளர் தகாத வார்த்தையால் பேசியதாகவும், நடைபாதை வியாபாரம் செய்ய யார் அனுமதித்தது என முரண்பட்டதாகவும் நடைபாதை வியாபாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_0226 (1) DSC_0230 (1) DSC_0231

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *