Search
Friday 15 December 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியா வடக்கில் புதுக்குளம் மகா வித்தியாலயம் வரலாற்று சாதனை (வீடியோ)

வவுனியா வடக்கில் புதுக்குளம் மகா வித்தியாலயம் வரலாற்று சாதனை (வீடியோ)

அண்மையில் வெளியாகிய க.பொ.த.( உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவன் வர்த்தக பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட நிலையில் முதலாமிடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதுடன், 16 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலை அதிபர் ச.சுபாஸ்கரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கணிதப்பிரிவில் செல்வதேவன் ஹனுஷ்யன் 2ஏ, பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் நான்காம் இடத்தினையும், வர்த்தகப்பிரிவில் ரங்கநாதன் யதுகுலன் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்..

இப் பாடசாலை வரலாற்றிலும், வவுனியா வடக்கு வலய வரலாற்றிலும் வர்த்தகப்பிரிவில் முதலாமிடத்தினை பெற்றது இதுவே முதற்தடவையாகும். மேலும் எமது பாடசாலையில் வர்த்த பிரிவில் ஆறு மாணவர்களும், கலைப்பிரிவில் எட்டு மாணவர்களும், கணித பிரிவில் இரண்டு மாணவர்களும் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்றுள்னர் எனவும் அவர் தெரிவித்தார்.

IMG_1805

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *