Search
Tuesday 17 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது!

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது!

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

காலை 10 மணிக்கு உள்ளுராட்ச்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் சபையின் தவிசாளர், உபதவிசாளர் ஆகியோரை தெரிவு செய்யும் சபை அமர்விலே அனைத்து கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தவிசாளர் தெரிவுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டனி என்பன போட்டியிட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நா.தணிகாசலம் 11 வாக்குகளை பெற்றார். அவருக்கு அவரது கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்களும்ஈ சுயேட்ச்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர். தமிழர் விடுதலை கூட்டனியின் சார்பில் போட்டியிட்ட ஜெ.ஜெயரூபன் 11 அவர்களும் வாக்குகளை பெற்றார். அவருக்கு அவரது கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவின் 5 உறுப்பினர்களும், சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர். பின்னர் திருவுலச் சீட்டு மூலம் தமிழ் கூட்டமைப்பின் நா.தணிகாசலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து உப தவிசாளருக்கான தெரிவில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் து.தமிழ்ச்செல்வன், பொதுஜன பெரமுன சார்பில் க.விக்கிரமபால, தமிழ் கூட்டமைப்பு சார்பில் ந.யோகராஜா ஆகியோர் போட்டி இடவுள்ளதாக முன்மொழியப்பட்ட நிலையில் தமிழர் விடுதலை கூட்டணியின் து.தமிழ்ச்செல்வன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் தமிழ் கூட்டமைப்பின் நா.யோகராஜா அவர்களுக்கு ஆதரவாக கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழுவின் ஒரு உறுப்பினரும் என 14 பேர் வாக்களித்தனர். பொதுஜன பெரமுனவின் விக்கிரமபால அவர்கள் தனது கட்சியினதும் சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவரினதும் வாக்கினையும் பெற்றார். இதனால் தமிழ் கூட்டமைப்பின் நா.யோகராசா உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

முன்னர் தவிசாளர் தெரிவில் நடுநிலைமை வகித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி உப தவிசாளர் தெரிவில் தமிழ் கூட்டமைப்புக்கு வாக்களித்தது. உப தவிசாளர் தெரிவில் தமிழர் விடுதலை கூட்டணி நடுநிலைமை வகித்திருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினரும் நடுநிலைமை வகித்தார்.

இத்தெரிவின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், ம.ஜெயதிலக, தர்மபால செனவிரட்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

IMG_0073 IMG_0056 IMG_0071

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *