Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வாகனங்கள் மீதான சொகுசு வரி நீக்கம்

வாகனங்கள் மீதான சொகுசு வரி நீக்கம்

வாகனங்கள் பலவற்றின் மீதான சொகுசு வரி விதிக்கும் திட்டம் திருத்தியமைக்கபட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
வான்கள் , கார்கள் , மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து இந்த வரி விதிக்கப்பட்டாது என அறிவித்துள்ளது.
அந்தவகையில் திருத்தப்பட்ட வரி சீர்திருத்தங்களின் பிரகாரம், 3.5 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் ஜீப்புகளுக்கும், 4 மில்லியனுக்கும் அதிகமான விலையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும், 6 மில்லியனுக்கும் அதிகமான இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கும் இந்த வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனத்தின் செலவு, காப்பீடு மற்றும் மதிப்பின் அடைப்படியிலேயே இறக்குமதி செலவு தீர்மானிக்கப்படும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை 1800 சி.சி.க்கு குறைவான இயந்திர திறன் கொண்ட பெட்ரோல் கார்கள், 2300 சி.சி-க்கும் குறைவான இயந்திர திறன் கொண்ட டீசல் கார்கள் மற்றும் 200 மெகாவாட் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் மின்சார கார்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *