Search
Monday 18 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வாகன போக்குவரத்து தண்டப்பணம் அதிகரிப்பு : விபரங்கள் இதோ

வாகன போக்குவரத்து தண்டப்பணம் அதிகரிப்பு : விபரங்கள் இதோ

வீதி ஒழுங்கு விதிகளை மீறி வாகனங்களை செலுத்துவோருக்கான தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கான வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் அனுமதியளிக்கபபட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல், மதுபானம் மற்றும் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட காப்புறுதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டபணத்தை 25000 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்துக்குள்ளாவதனால் ஏற்படும் உயிரிழப்பிற்காக அறவிடப்படும் தண்டப்பணம் ஒரு இலட்சத்திலிருந்து, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், 2 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையும், சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தும் விதிமீறலுக்காக நான்கு வேக பிரிவுகளின் அடிப்படையில் 3,000 முதல் 25,000 ரூபா வரை தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *