Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி
கிளிநொச்சியில் இன்று  காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனம் கரடிபோக்கு பகுதியில்அமைந்துள்ள விகாரையில் வழிபாட்டிற்காக நிறுத்தி வைக்கப்பட்டபோது, அதே திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பின்புறமாக மோதியமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபநே கிளிநொச்சி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தந்தையான மருதநகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நபர் தொலைபேசியில் உரையாடியவாறு பயணித்ததாகவும், எதிரில் நிறுத்தப்பட்ட வாகனத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடரபிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
n10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *