Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வாக்காளர்களை வாக்களிக்க விடாது தடுத்தால் அது குற்றசெயல் ஆகும்- யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்

வாக்காளர்களை வாக்களிக்க விடாது  தடுத்தால் அது குற்றசெயல் ஆகும்- யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்

வாக்களிப்பது வாக்காளர்களின் உரிமை. அதனை தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. வாக்காளர்களை வாக்களிக்க விடாது எவரேனும் தடுத்தால் அது குற்றசெயல் ஆகும்.அது தொடர்பாக உடனடியாக முறைப்பாடு செய்யுங்கள் அதற்கு நடவடிக்கை எடுப்போம்’ என யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வாக்காளர்களும் தமது வாக்குறிமையினை பாதுகாப்பாகவும் சுயாதீனமாகவும் பயன்படுத்த வேண்டும். அதற்கான சகல செற்பாடுகளை செய்துள்ளோம்.வாக்களிப்பிற்கு மக்களை தூண்டும் விதமாகவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ்.மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றோம்.இந்த தேர்தலில் பெருமளவான மக்கள் வாக்களிக்க வேண்டும் எனும் எண்ணத்தில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *