Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வாக்குகளுக்காக பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படுகின்றது-நாமல்

வாக்குகளுக்காக பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படுகின்றது-நாமல்

ஹம்பாந்தோட்டை அக்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் நல்லாட்சி அரசாங்கம் மத்தள விமான நிலையம் சரியில்லை என்று கூறினார்கள். அது ஏன் தெரியுமா? மஹிந்த ராஜபக்ஷவினால் நிர்மாணிக்கப்பட்டதால் அதனை சரியில்லை என்றார்கள்.இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஒன்று நாட்டுக்கு தேவையில்லை என கூறிய தரப்பினர். தற்போது பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக பெயரிட்டுள்ளனர்.நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில் பாதைகள் மற்றும் அதிவேக சாலைகளை அமைத்து அதனூடாக நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அறுவடைகளை நாட்டின் எந்தவொரு விமான நிலையத்திற்கும் கொண்டு சென்று சர்வதேசத்திற்கு அனுப்பி வைக்க முடியும். எங்களுக்கு திட்டம் ஒன்று இருந்தது என தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ராஜபக்ஷ ஆட்சியின் போது அபிவிருத்தி திட்டங்களை விமர்சித்த தரப்பினர் வடக்கின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற தயாராகின்றனர்.யாழ்ப்பாணத்திற்கு சர்வதேச விமான நிலையம் ஒன்றை வழங்க வேண்டாம் என்று கூறவில்லை என தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *