தலைப்பு செய்திகள்

வார்கடல்சூழ் முள்ளிவாய்க்கால் மண்ணே!

வார்கடல்சூழ் முள்ளிவாய்க்கால் மண்ணே!

போர்நடந்த மண்ணே! இறுதிப் போர் நடந்த மண்ணே!-அன்று
காரிருள்போல் வெடிமருந்துப் புகை கவிந்த மண்ணே!
நீர்அலைபோல் செந்நீர் குளித்து சிவந்து நின்ற மண்ணே!
ஊர்அழுதபோது உருகிநின்ற மண்ணே உருகி நின்ற மண்ணே !
ஓர் பதிலைக்கூறு; அன்று யார் இருந்தார்! யார் இறந்தார்?

சீரழகினோடு சிறந்துநின்ற மண்ணே! சிறந்து நின்ற மண்ணே!-இன்னும்
பாருலகுகெங்கும் தமிழர்வீரம் பறைந்து நிற்கும் மண்ணே!
வேர்வழியாய்நம் உறவு சொல்ல வேண்டிநின்ற மண்ணே!
தீர்வெதுவுமின்றிதினமுமும் போராடி சோர்வடைந்து போனோம்
ஓர் பதிலைக்கூறு; அன்று யார் இருந்தார்! யார் இறந்தார்?

வார்கடல்சூழ்முள்ளிவாய்க்கால் மண்ணே! முள்ளிவாய்க்கால் மண்ணே!
சூர்ப்படைகளின்கோரத்தை உலகுக்கு காட்டி நிற்கும் மண்ணே !
ஓர்மத்தைவிதைத்தெம் விடுதலைக்காய்உரமூட்டும் மண்ணே!
உயிரற்றஉடலங்களை மடிசுமந்த மண்ணே !உனக்குண்மை தெரியும்
ஓர் பதிலைக்கூறு; அன்று யார் இருந்தார்! யார் இறந்தார்?

– கொற்றவை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *