தலைப்பு செய்திகள்

வாழ்வாதாரதுக்காக பதவி விலகிய வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்

வாழ்வாதாரதுக்காக பதவி விலகிய வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்டு வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக தெரிவான சிவசோதி நவகோடி எனும் உறுப்பினர் விலகல் கடிதம் கையளித்துள்ளார்.எனது வாழ்வாதாரம் கடற்தொழில். ஆழ் கடல் தொழில் செய்வதனால் தொழிலுக்கு சென்றால் கடலில் 10 – 15 நாட்கள் தங்கு தொழில் செய்தே கரை திரும்புவேன். இதனால் சபை கூட்டத்திற்கு ஒழுங்காக சமூகமளிக்க முடியாது உள்ளது. அதனால் நானே விரும்பி விலகுகிறேன் என சிவசோதி நவகோடி தெரிவித்துள்ளார்

அவரது வெற்றிடத்திற்கு தாமோதிரம்பிள்ளை சதாசிவம் நியமிக்கப்பட்டு உள்ளார்.மேலும் தொழிலுக்கு செல்வதனால் சபை கூட்டங்களுக்கு ஒழுங்காக சமூகமளிக்க முடியாததனால் ,உறுப்புரிமையில் இருந்து விலகுவதாக வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் சிவசோதி நவகோடி விலகல் கடிததில் குறிப்பிட்டுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *