Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விக்னேஸ்வரனின் சாதனைகளும் சவால்களும்

விக்னேஸ்வரனின் சாதனைகளும் சவால்களும்

ஒழுக்கம், நேர்மை, தற்றுணிவுடன் லஞ்சம், சலுகைகளுக்கு விலைபோகாத அரசியல் தலைமைத்துவத்தை நீதியரசர் விக்னேஸ்வரன் கடந்த 6 வருடங்களாக வழங்கிவருகின்றார்.

முதலமைச்சர் பதவிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரணாகதி அரசியலுக்கும் ஏமாற்றுகளுக்கும் எதிராகவும் அரசாங்கங்களுக்கு அடிபணியாமலும் அவர் துணிச்சலாக மேற்கொண்ட நடவடிக்கைகளே தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டமும் இனப்படுகொலைக்கான நீதிக்குமான போராட்டமும் அஸ்தமித்துவிடாமல் தொடர்ந்தும் உயிர்ப்பாக பேணப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு காரணமாகும்.

விக்னேஸ்வரனின் அரசியல் பிரவேசம் சாத்தியம் ஆகியிருக்காதுவிட்டால் தமிழ் மக்களின் 70 வருடகால உரிமைப்போராட்டம் நல்லாட்சி காலத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும்.

இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றி தமிழ் மக்களின் உரிமைகளில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமின்றி அரசாங்கத்துடன் செயற்பட்டமையினால் அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் விக்னேஸ்வரனுக்கு எதிராக எல்லா அஸ்திரங்களையும் பயன்படுத்தியபோதும் அவற்றை முறியடித்து சலசலப்புகளுக்கு அஞ்சாமல் இறுதிவரை பதவியில் இருந்து மக்கள் பணி ஆற்றினார்.

2014 முதல் 2018 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 44251.38 மில்லியன் ரூபாய்கள்  மத்திய அரசிடம் கோரப்பட்ட போதிலும் 10,414. 35 மில்லியன் ரூபாய்களே  வழங்கப்பட்டது. இதில் ஒரு சதத்தையேனும் திருப்பி அனுப்பாமல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டுவதற்கும், போக்குவரத்து அபிவிருத்தி, உட்கட்டுமானம், பெண்கள் வலுவூட்டல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை முன்னெடுத்தார்.

ஆனால், விக்னேஸ்வரன் மத்திய அரசியும் நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பொய் ஒன்றை கட்டவிழித்து விட்டது. ஆனால், தான் பணத்தை திருப்பி அனுப்பியதாக எவராவது முடிந்தால் நிரூபியுங்கள் என்று விக்னேஸ்வரன் சவால் விட்டும் எவரும் செய்யமுடியவில்லை. ஆனால், விக்னேஸ்வரன் பணத்தை அனுப்பியதாக மீண்டும் மீண்டும் கூறி மக்களை அவருக்கு எதிராக திருப்ப கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

உண்மையில் ஒட்டுமொத்த நாட்டின் 870 திணைக்களங்கள், அமைச்சுக்களின் வடமாகாண சபையின் முதலமைச்சரின் அமைச்சே நிதி நிர்வாகத்தில் சிறந்தது என்று 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசாங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

மத்திய அரசாங்கத்திடம் கோரிய பணம் தமிழ் மக்களின் சொற்ப தேவைகளை பூர்த்திசெய்ய கூட போதாமல் இருந்தமையினால், புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதி உதவிகளை பெறும் நோக்கத்தில் முதலமைச்சர் நிதியத்தை அமைப்பதற்கு விக்னேஸ்வரன் மேற்கொண்ட கடும் முயற்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு குந்தகம் செய்தது. இதனால், பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் நகரசபை மற்றும் கனடாவின் மார்க்கம் நகர சபை ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட இரட்டை நகர உடன்படிக்கையின் ஊடாக தமிழ் மக்கள் பயன்பெறுவது தடுக்கப்பட்டது.

விக்னேஸ்வரனின் 4 வருட பதவிக்காலத்தில் தமிழ் மக்களின் நலன்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை அமுல்படுத்துவதற்கு பல்வேறு தரப்புக்கள் பல்வேறு வழிகளை கையாண்டபோதிலும் அவரது நிபுணர்களைக் கொண்ட மதிப்பீடு குழு சிபாரிசு செய்தும் திட்டங்ககளை மட்டும் அமுல்படுத்தவே அவர் அனுமதி அளித்தார்.

விக்னேஸ்வரனின் நேர்மை, ஒழுக்கம், புலமை, தற்துணிவு, சலுகைலகுக்கு விலைபோகாத தன்மை ஆகியவை காரணமாக உலகின் அரசியல் தலைவர்கள் மத்தியில் விக்னேஸ்வரன் அவர்களுக்கு மிகுந்த மரியாதையும் கௌரவமும் இருப்பதுடன் அவரின் கருத்துக்கள் கூர்ந்து கவனிக்கப்படுவதுடன் உள்வாங்கப்படுகின்றன.

அதேபோல, வேறு எந்தத் தமிழ் தலைவர்களை விடவும் விக்னேஸ்வரன் அவர்களின் கருத்துக்கள் தென் இலங்கை இனவாதிகளை அச்சம் கொள்ள வைப்பதாக இருக்கின்றது. இலங்கையில் தமிழ் மக்களின் வரலாறு, பெருமை, செழுமை ஆகியவை தொடர்பில் விக்னேஸ்வரன் அவர்கள் துணிச்சலாகவும் மிகவும் ஆணித்தரமாகவும் கூறிவரும் கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பற்றிய அவசியமான ஒரு கருத்துவினைப்பாட்டை உருவாக்கி இருக்கின்றன. இதன்காரணமாகவே, கொழும்பில் இருந்து பொலிஸ் புலனாய்வாளர்கள் விக்னேஸ்வரனின் இல்லத்துக்கு சில தினங்களுக்கு முன்னர் சென்று இலங்கையின் முதல் பூர்வீக குடிகள் தமிழரே என்று அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

இத்தகைய ஒரு தலைவரின் கீழேயே இறுக்கமான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி செயற்பட்டுவருகின்றது. கொள்கை அடிப்படையிலும் புதிய அணுகுமுறையின் அடிப்படையிலும் வடக்கையும் கிழக்கையும் சார்ந்து 5 கட்சிகள் ஒன்றுசேர்ந்து உருவாக்கியுள்ள ஒரு பெரும் கூட்டுக்கட்சியாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி காணப்படுகின்றது.

வேட்பாளர்கள் தமது சொத்துவிபரங்களை வெளியிடுவது, பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாதாந்தப் படிகளில் குறைந்தது 10 சத வீதத்தினை பொதுமக்களின் நலன்களுக்கு வழங்குவது உட்பட பல்வேறு நிபந்தனைகளை இந்த கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை உள்ளடக்கியிருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *