Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விக்னேஸ்வரன் வசம் மேலும் 3 அமைச்சுக்கள்: இன்று பொறுப்பேற்றார்

விக்னேஸ்வரன் வசம் மேலும் 3 அமைச்சுக்கள்: இன்று பொறுப்பேற்றார்

வடமாகாண முதலலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் மூன்று அமைச்சுப் பொறுப்புக்களை இன்று மாலை ஏற்றுள்ளார்.

இன்று மாலை 6.00 மணியளவில் இந்த அமைச்சுப் பொறுப்புக்களையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இந்த பதவியேற்பு வைபவம் இடம்பெற்றது.

சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்களே இன்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

வட மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், நன்னடத்தையும் சிறுவர் பாராமரிப்புச் சேவைகளும், சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல் மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய அமைச்சுக்கள் பா.சத்தியலிங்கம் வசம் இருந்தன.

இவற்றில் சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்கள் இன்று வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாண சபையின் இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு, அளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரியவந்திருக்கின்றது.

R-06


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *