Search
Friday 19 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விசேட அமைச்சரவையில் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

விசேட அமைச்சரவையில் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றைய தினம் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவை கூட்டத்தில் கூட்டுப்படைகளின் பிரதானிக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இராணுவத்தினர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாமென ஜனாதிபதி பொலிஸார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள கூட்டுப்படைகளின் பிரதானி ரவிந்திரன குணரட்னவை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணை வருமாறு கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *