Search
Tuesday 17 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விடுமுறையில் ஊர் சென்றவர்கள் கொழும்பு திரும்ப விசேட போக்குவரத்து சேவைகள்

விடுமுறையில் ஊர் சென்றவர்கள் கொழும்பு திரும்ப விசேட போக்குவரத்து சேவைகள்

தமிழ் , சிங்கள புத்தாண்டு விடுமுறையில் வீடுகளுக்கு சென்றவர்கள் கொழும்பு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதன்படி ஹட்டன் , பதுளை , கண்டி , மாத்தளை , மாத்தறை , காலி , அநுராதபுரம் , வவுனியா , மன்னார் , யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு , அம்பாறை உள்ளிட்ட தூர இடங்களிலிருந்து விசேட பஸ் சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதற்காக 5000ற்கும் மேற்பட்ட பஸ்கள் வழமையைவிட மேலதிக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் , அனுராதபுரம் , மாத்தறை , மட்டக்களப்பு மற்றும் பதுளை உள்ளிட்ட இடங்களிலிருந்து விசேட ரயில் சேவைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *