Search
Thursday 16 August 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வித்தியா கொலை கைதிகளின் மேன்முறையீட்டு வழக்கு இன்று உயர் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு

வித்தியா கொலை கைதிகளின் மேன்முறையீட்டு வழக்கு இன்று உயர் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு

வித்தியா கொலை கைதிகளின் மேன்முறையீட்டு வழக்கு 5 நீதி­ய­ர­சர்­களை உள்­ள­டக்­கிய நீதி­ய­ர­சர்கள் குழுவினர் முன்­னி லை­யி­லேயே இடம்­பெ­ற­வுள்­ளது. யாழ்ப்­பாணம் – புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்­கில் ட்­ரயல் அட்பார் நீதி­மன்­றினால் 7 எதி­ரி­க ளுக்கு வழங்­கப்­பட்ட மரண தண்­டனைத் தீர்ப்பை எதிர்த்து குற்­ற­வா­ளி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட மேன்­மு­றை யீட்டின் மீதான விசா­ர­ணை­ இன்­றைய தினம் உயர் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டவுள்­ளது.

இதன்­படி இந்த வழக்கின் விசாரணை இன்­றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ள­துடன் அதற்­காக தண்­டனை விதிக்­கப்­பட்ட 7 கைதிகளையும் உயர் நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­து­மாறு சிறைச்­சாலை அதி­கா­ரி க­ளுக்கு உத்­த­ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்­படி குற்­றஞ்­சாட்­டப்­பட்ட 9 சந்­தே­க­ந­பர்­களில் இருவர் நிர­ப­ரா­தி­கள் என தீர்ப்பளிக்கப்பட்டு விடு­தலை செய் யப்­பட்ட நிலையில் ஏனைய 7 பேருக்கும் கடந்த வருடம் ட்ரயல் அட்பார் நீதி­மன்றால் மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *