Search
Wednesday 26 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விபத்தில் 44 பேர் காயம்

விபத்தில் 44 பேர் காயம்

காலி – அக்குரஸ்ஸை பிரதான வீதியின் கியன்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் 44 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

தனியார் பேரூந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்குரஸ்ஸையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இபோச பஸ்ஸும் எதிர் திசையில் வந்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இவ்வித்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 31 பெண்கள் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் ஆறுபேர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *