Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விமல் வீரவன்ச வௌியிட்ட கருத்துக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் ரிஷாட் பதியுதீன் முறைப்பாடு

விமல் வீரவன்ச வௌியிட்ட கருத்துக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் ரிஷாட் பதியுதீன் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முன்வைத்துள்ள பல பொய்யான குற்றச்சாட்டுக்களால், தான் உள்ளிட்ட முஸ்லிம் சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக விமல் வீரவன்சவின் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட கருத்துக்களுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியதற்கான சாட்சிகள் உள்ளதாகவும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தான் தயார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வௌியிட்ட கருத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *