Search
Thursday 21 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விரைவில் ஆட்சியை கைப்பற்றுவோம் : நாமல் உறுதி

விரைவில் ஆட்சியை கைப்பற்றுவோம் : நாமல் உறுதி

விரைவில் பெரும்பான்மையை உறுதிப்படுத்தி அரசாங்கத்தை கைப்பற்றுவோமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை ஆட்சி செய்யும் தற்போதைய அரசாங்கம், மக்களுக்காக சேவையாற்றுவதை காட்டிலும் பதவியாசை கொண்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. இதேவேளை நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாடுகளுக்கே அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. ஆனாலும், நாம் ஒருபோதும் அதற்கு இடமளிக்கமாட்டோம். மேலும், நாட்டு மக்களும் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற நிலையில் உள்ளதுடன் எங்களது மீதே அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகையால், தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்தினால், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பது உறுதி என நாமல் ராஜபக்ஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *