Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விரைவில் பொதுத் தேர்தல்? : நடவடிக்கைகள் ஆரம்பம்

விரைவில் பொதுத் தேர்தல்? : நடவடிக்கைகள் ஆரம்பம்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டுமென்று அரசியலுக்குள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பாராளுமன்றத்தில் அது தொடர்பான யோசனையை கொண்டு வந்தோ அல்லது பாராளுமன்ற தேர்தல் அவசியமா? என சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியோ அதற்குள் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்றைய தினம் நாடு திரும்பவுள்ள நிலையில் இதன் பின்னர் இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு சில தரப்பினர் எதிர்ப்புகளை வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *