Search
Saturday 16 December 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வீரமுனைப்படுகொலையின் 27வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிப்பு

வீரமுனைப்படுகொலையின் 27வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிப்பு

அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை தமிழ் கிராமத்தில் இன்று சனிக்கிழமை கொலைவெறி தாக்குதலுக்கு இரையாகிய தமிழர்களின் உயிர் ஆண்மா ஈடேற்றம் பெற நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.1990ம் ஆண்டு 8ஆம் மாதம் 12ம் திகதி அதாவது இன்றைய தினம் சம்மாந்துறை வீரமுனையின் ஏதும் அறியாத அப்பாவி தமிழ் மக்களை வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய வளாகம் என்று கூட பார்க்காமல் விரட்டி விரட்டி பெண்கள் சிறுவர்கள்,கர்ப்பணிகள், முதியவர்கள் என்று கூட பாராது மிகவும் அகோரமான முறையில் பாசிச கொடுங்கோல் இராணுவத்துடன் இணைந்த காடையர்களால் கொன்று குவித்தனர்.

இவர்கள் தமிழர்கள் என்றகாரணத்திற்காகவே கொன்று பிணமாக்கப்பட்டார்கள்.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீரமுனையை சூழ ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அம்பாறை, வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வீரச்சோலை,சம்மாந்துறை உட்பட பல்வேறு இடங்களில் இருந்த மக்கள் இடம்பெயர்ந்து வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம்,வீரமுனை இராமகிருஸ்ணமிசன் பாடசாலை ஆகியவற்றில் தஞ்சமடைந்திருந்தனர்.

1990ம் ஆண்டு 8ஆம் மாதம் 12ம் திகதி காலை வேளையில் பாடசாலை மற்றும் ஆலயத்திற்குள் உட்புகுந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இராணுவத்தினரும் கொலைவெறித்தாக்குதலை மேற்கொண்டனர். சிறுவர்கள்,குழந்தைகள் உட்பட 55பேர் வெட்டியும் சுட்டும் குழந்தைகள் தூக்கி அடித்தும் கொல்லப்பட்டனர்.

அத்துடன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட 20க்கும் மேற்பட்டவர்களின் நிலை இதுவரையில் என்ன நடந்தது என்பது கூட தெரியவில்லை.

அத்துடன் இதே காலப்பகுதியில் மல்வத்தையில் வீடுகளில் தங்கியிருந்த சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் வேலைகளுக்கு சென்ற 20க்கும் மேற்பட்டவர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை வெறி தாக்குதலை தொடர்ந்து அகதிகளாக வீரமுனையை விட்டு சொறிக்கல்முனை ஊடாக ஓடிச்சென்றவர்கள் சவளக்கடை இராணுவ முகாமில் மறிக்கப்பட்டு 27க்கும் மேற்பட்டவர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு முன்பாக பல தடவைகள் இந்த ஆலயம் மற்றும் பாடசாலைகளுக்குள் தஞ்சமடைந்திருந்தவர்கள் சுற்றிவளைப்பு செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஓரிரு மாதங்களில் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம்,வீரமுனை இராமகிருஸ்ணமிசன் பாடசாலைகளில் தஞ்சமடைந்திருந்த சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் காணாமல்ஆக்கப்பட்டுள்ளார்கள்.இவர்களின் நிலை இன்றுவரை தெரியாத நிலையே இருந்துவருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து தமிழர்களை முற்றாக அழிக்க வேண்டும் என்றே இந்த இனப்படுகொலை இடம்பெற்றது இப்படியான விடயங்களை செய்தவர்களுக்கு இன்னும் தண்டனை கூட கிடைக்கவில்லை இருந்த போதிலும் இங்கு கொன்று குவிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு ஈகச்சுடர் ஏற்றி நினைவேந்தல் வருடா வருடம் நடாத்தப்படுகின்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பா.உ கோடீஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பா.உ சிறிநேசன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன்,கலையரசன்,துரைரெட்ணம் சமூக சேவையாளர் ஜெயசிறில் மற்றும் கோயில் தர்மதத்தாக்கள் ஊர்பிரமுகர்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உயிர் நீத்த உறவுகளின் உறவுகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு ஈகச்சுடர் ஏற்றி நினைவேந்தலை நடாத்தினர்.

01 03 04 05 06 07 08 09 10 11 12 13 14

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *