தமிழ் , சிங்கள் புத்தாண்டு காலப் பகுதியில் மின்வெட்டு இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிச் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று மின்சார நெருக்கடி நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை மின்சார நெருக்கடி நிலைமைக்கு துரிதமாக தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் எவ்வாறாயினும் வெசாக் தினத்திற்கு முன்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)

Previous Postசித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. உபகுழு திங்களன்று வருகிறது
Next Postவறட்சியால் நீர்விநியோகத்திற்கு பாதிப்பு : கொழும்பில் 24 மணி நேர நீர்வெட்டு