Search
Monday 25 September 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெடிகுண்டு புரளியின் பிடியில் ரஸ்ய நகரங்கள்

வெடிகுண்டு புரளியின் பிடியில் ரஸ்ய நகரங்கள்

கடந்த நான்கு நாட்களாக ரஸ்யாவின் பல நகரங்கள் குண்டுபுரளியினால் பாதிக்கப்பட்டுள்ளன
வெடிகுண்டு புரளியை தொடர்ந்து பல நகரங்களில் வணிக வளாகங்கள் புகையிரத நிலையங்கள் பாடசாலைகள் போன்றவற்றிலிருந்து பொதுமக்களும் மாணவர்களும் வெளியேற்றப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன
எனினும் இதுவரை இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் பொய்யானவையாக காணப்பட்டுள்ளன இதனை தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களை அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
வெடிகுண்டு புரளியை கிளப்பியவர்கள் யார் என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை இந்தகுண்டுபுரளிகள் ரஸ்யாவிற்கு வெளியேயிருந்து வந்துள்ளன என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

russia1
இது வெளிநாட்டில் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை மொஸ்கோவும் இந்த பதட்டத்தை சந்தித்துள்ளது வெடிகுண்டு புரளி காரணமாக கிரெம்ளினிற்கு அருகில் உள்ள வணிகவளாகத்திலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரஸ்ய தொலைக்காட்சிகள் இது குறித்து செய்திகளை வெளியிடாதஅதேவேளை கிரெம்ளின் ஆதரவு செய்தித்தாள்கள் உக்ரைன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *