Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அஞ்சலி

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அஞ்சலி

33 வருடங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தலைவர் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளினதும் அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.

1983 ஆம் ஆண்டு ஜீலை 27 திங்கள் கிழமை வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, ஜெகன், தேவன், நடேசுதாசன், சிவபாதம், சிறீக்குமார், குமார், மரியாம்பிள்ளை, குமாரகுலசிங்கம் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் 33வது அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தருமான வினோதரராதலிங்கம் அவர்களின் தலைமையில் இவ் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன், ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமச்சந்திரன், வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

IMG_7427

IMG_7422

IMG_5869 IMG_5881

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *