Search
Tuesday 17 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெளிவிவகார செயலராக பதவியேற்கிறார் பிரசாத் காரியவசம்

வெளிவிவகார செயலராக பதவியேற்கிறார் பிரசாத் காரியவசம்

வெளிவிவகார அமைச்சின் செயலராக பிரசாத் காரியவசம், நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார்.

அதேநாளில்,தற்போது வெளிவிவகார அமைச்சின் செயலராக உள்ள எசல வீரக்கோன், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த காரணத்தையும் வெளிப்படுத்தாமல், கடந்த மாதம் 29ஆம் திகதி ஜனாதிபதி வெளியிட்ட உத்தரவில், வெளிவிவகார அமைச்சின் செயலராக பிரசாத் காரியவசத்தையும், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் செயலராக எசல வீரக்கோனையும் நியமிப்பதாக கூறியிருந்தார்.

இதையடுத்து, 2004ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்காவில், தூதுவராகப் பணியாற்றிய பிரசாத் காரியவசம், நாடு திரும்பி புதிய பதவியை ஏற்கவுள்ளார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *