Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்

வெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்

மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜிம்ரோநகர் மக்கள் வருடா வருடம் வெள்ளத்தினால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இம்முறை குறித்த பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து இருந்த வீடுகளையும் அகற்றி பழைய வீடுகளை கவனிக்காதும் நுண் நிதி நிறுவங்களிடமும் நகைகளை அடகுவைத்தும் புதிதாக வீடுகளை அமைப்பதற்கான அத்திவாரங்களை கட்டிய நிலையில் சிலருக்கு முதல் கட்ட நிதியும் பலருக்கு இரண்டாம் கட்டம் வரை மட்டுமே நிதி வழங்கப்பட்டதன் காரணமாக வீட்டுத் திட்டங்கள் பூர்த்தியாகாத நிலையில் மக்கள் தற்காலிகமாக இருந்த வீடும் இன்றி புதிய வீடும் இன்றி கடன் சுமையில் தத்தளிப்பதுடன் வெள்ள நீரில் மிதந்தவாறு வாழ்கை நடத்தி வருகின்றனர்.

வீடுகள் மாத்திரம் இன்றி மைதானம் பாடசாலைகள் பாதைகள் முன்பள்ளிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ள நிலையில் பாடசாலை மாணவர்களும் அவசர நோயாளிகள் கூட ஒரு மருந்து தேவைக்கு அவசரத்திற்கு செல்வதென்றால் கூட முழங்கால் அளவிலான தண்ணீர் ஊடாக வந்து தான் செல்ல வேண்டிய நிலையை காணக்கூடியதாக உள்ளது.1

பாடசாலை செல்லும் மாணவர்கள் தங்களுடைய சப்பாத்துகளை கைகளில் கொண்டு சென்று பாடசாலை வளாகத்தினுல் வைத்தே அணிய வேண்டிய நிலை இருப்பதோடு பாடசாலை வளாகத்தினுள் தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சாந்திபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகம் நீரில் மூழ்கி இருப்பதன் காரணமாக மாணவர்கள் மலசல கூடங்களை பாவிப்பதற்கோ விளையாட்டு மைதானத்தை பாவிப்பதற்கோ முடியாத நிலை காணப்படுவதாக பாடசாலை மாணவர்கள் கவலை தெரிவிகின்றனர்.3

மேலும் நிதி வழங்கப்படாத வீடுகளுக்கு நிதிவருவது என்பது தற்போதைய தேர்தல் காலத்தில் சாத்தியமற்றது என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட நிலையில் தொடர்சியாக பெய்யும் மழையில் இம் மக்களின் நிலை மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது.(15)2 4 6 7


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *