Search
Friday 28 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெள்ளவத்தை தீ விபத்தில் ஒருவர் பலி

வெள்ளவத்தை தீ விபத்தில் ஒருவர் பலி

கொழும்பு வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் இரண்டு மாடி குடியிருப்பொன்றில் இன்று (25) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டினுள் இருந்த 79 வயதுடைய முதியவர் ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.

கல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்பு பிரிவினருடன் இணைந்து பொலிஸார் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் வெள்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *