Search
Saturday 7 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வேட்பாளராகும் தகுதி ரணிலுக்கே உண்டு : சங்கக்கார

வேட்பாளராகும் தகுதி ரணிலுக்கே உண்டு : சங்கக்கார

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் எண்ணம் தனக்கு கிடையாது. எவ்வாறாயினும் வேட்பாளராவதற்கு தகுதியானவர் ரணில் விக்கிரமசிங்கவே என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
குமார் சங்கக்காரவின் பெயரில் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள மாதிரி கிராமத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச “கிரிக்கெட்டில் சங்கக்கார கையாளும் யுக்தியை, நுட்பத்தை அரசியலில் களத்தில் நான் கையாண்டு வருகின்றேன். இந்த ஆண்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சங்கக்கார
கட்சி என்றால் அதற்குள் முரண்பாடுகள் வருவது வழமை. அதேவேளை, அரசியல்வாதிகளும் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப கருத்துக்களை வெளியிடுவதும் வழமை. நான் சாதாரண பிரஜை. அரசியலில் களம் இறங்கும் எண்ணமோ அல்லது அரசியல்வாதிகளை விமர்சிக்கும் தகுதியோ என்னிடம் இல்லை. எனினும், ஒவ்வொரு செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்வி ஒவ்வொரு கட்சிகளுக்குள்ளும் தற்போது எழுந்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், எனக்கு அப்படி ஒன்றும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே உண்டு என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *