Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஒருவருக்கு மரண தண்டனை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஒருவருக்கு மரண தண்டனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மற்றும் இருவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரேமலால் ஜயசேகர போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் கூட்டம் ஒன்றை தயார் செய்வதற்கான ஆயத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூட்டு நடத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்ததுடன் இரண்டு பேர் படுகாயமடைந்திருந்தனர். சாந்த தொடங்கொட என அழைக்கப்படும் தொடங்கஹே சுசில் பெரேரா என்ற நபர் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டதுடன் கே. கருணாதாஸ வீரசிங்க மற்றும் எம்.ஸ்ஹாந்த் ஆகியோரே படுகாயங்களுக்குள்ளாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *