Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஹட்டனில் சுற்றி வளைக்கப்பட்ட பேஸ்புக் களியாட்டம் : போதைப் பொருட்களுடன் பலர் கைது

ஹட்டனில் சுற்றி வளைக்கப்பட்ட பேஸ்புக் களியாட்டம் : போதைப் பொருட்களுடன் பலர் கைது

ஹட்டன் நகரில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் கேரள கஞ்சா , போதை தூள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு ஹட்டன கலால்வரி திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் மூலம் ஹட்டன் நகரில் பிரபல விடுதியொன்றில் ஒன்றிணைந்த இளைஞர் யுவதிகள் குழுவொன்று நேற்று நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனரர்.
இதன்போது அவர்களிடையே போதைப்பொருட்களும் பரிமாறப்பட்டுள்ளன. இதில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 16 முதல் 30 வயதுடைய இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். -(3)1 (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *